பாராளுமன்ற உறுப்பினர்கள் ரயில்களில் பயணம் செய்ததற்கு ஆன செலவு குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் உள்ள இரு அவை உறுப்பினர்களும் ரயில்களில் இலவசமாக பயணிக்க வசதி உள்ளது. நடப்பு எம்.பிக்களுக்கு முதல் வகுப்பு ஏசி பெட்டியிலும், முன்னாள் எம்.பிக்களுக்கு இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியிலும் இலவசமாக பயணிக்க அனுமதி உள்ளது. இதற்கான கட்டணத்தை மத்திய அரசு ரயில்வேக்கு செலுத்தும்.
அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் எம்.பிக்களின் ரயில் பயண செலவுகளுக்காக ரயில்வேக்கு ரூ.62 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசின் மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது. இதில் முன்னாள் எம்.பிக்களின் பயண செலவு ரூ.26.92 கோடி எனவும், நடப்பு எம்.பிக்களின் பயண செலவு ரூ.35.21 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது. அதுபோல கொரோனா பாதிப்பு இருந்த 2021-22ம் ஆண்டில் இந்த செலவும் ரூ.2.47 கோடியாக இருந்துள்ளது.