Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக முதல்வரிடம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கொடுத்த புகார் !

Advertiesment
தமிழக முதல்வரிடம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கொடுத்த புகார் !
, வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (00:07 IST)
கல்லூரி முதல்வரிடம் விசாரணைக்கு சென்றும், ஆஜராகியும் மாணவர்களுடைய பணம் பல லட்சம் என்ன ஆனது மர்மம் என்ன ?  கரூர் அடுத்த தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் புவி அமைப்பியல் துறையின் தலைவர் கரிகாலனை பற்றி, கடந்த மார்ச் மாதம் சுமார் 40 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி முதல்வரிடம், துறைரீதியான புகார்களையும், அந்த துறையில் பயிலும் மாணவ, மாணவிகளை தொல்லை செய்வதாகவும், புகார் தெரிவித்திருந்தனர்.

இது சம்பந்தமாக மீண்டும், ஜூலை மாதம் அதே மாணவ, மாணவிகள் மற்றும் இதற்கு முன்னர் கல்லூரி படிப்பினை முடித்து விட்டு சென்ற மாணவ, மாணவிகளும், இவர் மீது அடுக்கடுத்தான புகார்கள் தெரிவித்துள்ளனர். இவர் இந்ததுறையில் பயிலும் மற்றும் பயின்ற மாணவ, மாணவிகளின் பணத்தினை முறைகேடாக செலவு செய்தது ஆதரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளது. இது சம்பந்தமாக மாணவ, மாணவிகள் தமிழக முதல்வர், தலைமைச்செயலாளர், உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர் ஆகியோருக்கு கடிதம் மூலமாக ஆதரப்பூர்வமாக புகார் தெரிவித்திருந்தனர். இது சம்பந்தமாக, கல்லூரியின் முதல்வர், புகார் சாட்டப்பட்ட துறையின் தலைவர் கரிகாலன் மற்றும் அத்துறையினை சார்ந்த புகார் கொடுத்த மாணவ, மாணவிகளை கொண்டு ஒரு விசாரணைக்குழு ஒன்றினை அமைத்தார். இந்த விசாரணையானது, ஆகஸ்ட் மாதம் 4 ம் தேதி நடைபெறும் என்று கல்லூரியின் முதல்வர் அறிக்கை ஒன்றினை பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு கடிதம் மூலம் விசாரணைக்கு ஆஜராகுமாறும் அனுப்பி இருந்தார். இதை தெரிந்து கொண்ட அந்த துறையின் தலைவர் கரிகாலன், கடந்த ஆகஸ்ட் 2 ம் தேதி மாலை 3 மணிக்கு கல்லூரியின் முதல்வர் அறைக்கு சென்று முதல்வரை மிரட்டி மாணவர்கள் கொடுத்த புகார் கடிதத்தினை அரசு விதிகளை மீறி. புகார் கடிதங்களை நகல் எடுத்து சென்றுள்ளார். கல்லூரியில் முதல்வர் கூறும் அறிவுரைகளையும் கேட்பது கிடையாதாம், இவர், கடந்த 5 ஆண்டுகளில் 10 முறை பீல்டு ட்ரீப் (Field trip) மாணவ, மாணவிகளை அழைத்து சென்றுள்ளார். அதில், 10 லட்சத்திற்கும் மேலாக முறைகேடு செய்துள்ளார். பிறகு கடந்த 5 ஆண்டுகளில் மாணவ, மாணவிகளிடம் வசூல் செய்த பைன் (Fine) தொகையும் பல ஆயிரங்கள் தாண்டும், இதுதவிர மாணவ, மாணவிகளை பீல்டு ட்ரீப் அழைத்து சென்ற ரசீதினை இதுவரை கொடுத்ததில்லை, மிஞ்சிய பணத்தினையும் திரும்ப கொடுத்ததில்லை, எனவே, இது சம்பந்தமாக முறையான விசாரணை மேற்கொண்டு எங்களுடைய பணத்தினை எங்களிடம் திருப்பி கொடுக்க வேண்டுமென்று கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் இந்நாள் மாணவர்களும், முன்னாள் மாணவர்களும் மற்றும் பெற்றோர்களும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மாணவர்களாகிய எங்களுக்கு படிப்பு சம்பந்தமாகவும், பிற்காலத்தில் வேலைவாய்ப்பு சம்பந்தமாகவும் உயிருக்கு ஏதேனும் ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பு அந்த துறையின் தலைவர் கரிகாலனே பொறுப்பேற்க வேண்டுமென்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கண்ணீர்மல்க மாணவர்கள் கூறியுள்ளனர். தற்போது இந்த விசாரணை மற்றும் புகார் குறித்த ஸ்கேனர் காப்பி ஒன்று ஆங்காங்கே மனுக்களாக வாட்ஸ் அப்பில் வைரலாகி வருவதோடு, இங்கே உள்ள எங்கள் மாவட்ட அமைச்சரும், எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவருமான அமைச்சர் செந்தில்பாலாஜியிடுவோம் முறையிடுவோம் என்று அக்கட்சியினை சார்ந்த அக்கட்சியினை சார்ந்த பல பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு வெகுமதி