Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

A 4 சைஸ் பேப்பரில் விளம்பரம்... கல்லூரியினை அவமானப்படுத்திய பேராசிரியர்கள் மாணவர்கள் புகார்...

A 4 சைஸ் பேப்பரில் விளம்பரம்... கல்லூரியினை அவமானப்படுத்திய  பேராசிரியர்கள்  மாணவர்கள் புகார்...
, திங்கள், 7 டிசம்பர் 2020 (23:07 IST)
கரூர் அரசு கலைக்கல்லூரியில் இளநிலை படித்து முடித்த மாணவர் பொன்மணி (வயது 23), கூறும் போது, நான் கணினி அறிவியல் துறையில் இளங்கலை முடித்துள்ளேன், இந்த ஆண்டு முடிவில் தான் கல்லூரி படிப்பு முடித்தேன். எனக்கு சான்றிதழ்கள் தருவதில் ஒரு மாதம் இழுத்தடிப்பு செய்து நிர்வாகமும், எங்கள் துறை தலைவரும் வஞ்சகம் கொண்டு எனக்கு இழுத்தடிப்பு செய்துள்ளனர்.

இதனால் நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பில் சேர முடியாமல் போய் விட்டது. அது மட்டுமில்லாமல், எங்கள் துறையில் சில பெண் பேராசிரியர்கள் சரியாக பாடம் நடத்துவது கிடையாது. நாங்கள் (மாணவர்கள்) புரோக்ராம் போட்டு முடித்த பிறகு அதை எங்களுக்கு பிரிண்ட் அவுட் எடுத்து தருவது கல்லூரியில் உள்ள ஒவ்வொரு துறையின் கடமை, ஆனால் மாணவர்களுக்கு எதுவும் செய்வது கிடையாது, லேப்பில் இண்டர்நெட் வசதிகள் இருந்தும் இண்டர்நெட் வசதி மாணவ, மாணவிகளுக்கு கொடுப்பதில்லை, மேலும், இத்துறையில் பி.எச்.டி படிக்கும் மாணவர்கள் கூறும் போது, எங்கள் துறை தலைவர் UGC மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் விதியை மீறி, அவர், விநாயகா மெஷின் பல்கலைக்கழகம், கோவை கற்பகம் பல்கலைக் கழகம், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் என்று பல்வேறு பல்கலைக்கழகங்களில் விதியை மீறி பி.எச்.டி கைடு சீட் செய்து வருகின்றார். தற்போது இவர் எத்தனை பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி கைடு சீட் முறைகேடாக  வைத்துள்ளார் என்பது எங்களுக்கு தெரியாது என்று அந்த மாணவர் கூறியுள்ளார். மேலும் எங்கள் துறையில் முறையாக பிற பேராசிரியர்களை ஆலோசித்து எதுவும் செய்யாமல் தன்னச்சையாக முடிவு எடுத்து வருகின்றார் என்றார். இந்த துறையில் பணி புரியும் பெண் பேராசிரியர் ஒருவர் இங்கு (தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில்) கையெழுத்து போட்டு விட்டு, வெள்ளியணையில் உள்ள அமராவதி கலை அறிவியல் கல்லூரி என்கின்ற தனியார் கல்லூரிக்கு சென்று தனியார் கல்லூரியின் வளர்ச்சிக்கு ஆலோசனைகள் கூறி வருகின்றார். இங்குள்ள வரலாற்றுத்துறையில் உள்ள நூலகத்தில் பல எங்கள் முதுநிலை PG., M.Phil., Ph.D., போன்ற ஆய்வேடுகள் திருடப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் உள்ள டேட்டாக்களை எடுத்து வேறு கல்லூரியினை சார்ந்த மாணவர்களுக்கு ஆய்வேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம், பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் தில்லுமுல்லுகள், அதுமட்டுமில்லாமல், PG படிக்கும் மாணவர்களை ஆய்வுகள் சம்பந்தமாக எதையும் சொல்லி தராமல், பேராசிரியர்களே PG மாணவர்களுக்கு thesis (ஆய்வேடுகள்) தயாரித்து கொடுத்து அதற்கும் பணம் பெற்றுக் கொள்கின்றார்கள். நாங்கள் சனிக்கிழமை நேற்று இக்கல்லூரிக்கு M.Phil. எழுத வந்த போது, எங்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வில்லை, கல்லூரி நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது என்பது தெரியவில்லை, அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ரூ 200 மட்டும் செலவு செய்திருந்தால் ஒரு பிளக்ஸ் வைத்து M.Phil., நடைபெறும் இடத்தினை தெளிவாக கூறி இருக்கலாம் அதை வைத்து விட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவர்கள் மற்றும் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் முகம் சுழிக்க வைத்தது போல, ஆங்காங்கே கிழிந்த பேனரில் ஒரு A 4 சைஸ் பேப்பரில் பிரிண்ட் எடுத்து வைத்து ஒட்டி கல்லூரியின் தரத்தினையே கெடுத்துள்ளனர் என்கின்றனர் பலர்.    

இந்நிலையில், கணிதத் துறையில் பயின்று வரும் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு ஒழுங்காக பாடம் எடுப்பது கிடையாது. அப்படி பாடம் எடுத்தாலும், மாணவர்களுக்கு தவறுதலாக வேண்டுமென்றே அவர்கள் பெயில் ஆவதற்கு அச்சாரம் போடுவது போல செய்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் முன்னாள் மாணவர்கள்.

இந்த பேனர் வைத்தது போல் தான் மற்ற துறையின் நிர்வாகமும் இருக்குமா ? என்கின்ற ஒரு முன் உதாரணத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும், அனைத்து நடவடிக்கைகளும் ஒரு பேப்பரின் செயல்பாடு போல தான் உள்ளதாகவும், செயலில் எதுவும் இல்லை என்கின்றனர் பொதுநல ஆர்வலர்கள்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சைஃபர் குற்றங்களினால் தலைசுற்ற வைக்கும் அளவு பண மோசடி !