Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூர் அரசு கலைக்கல்லூரி – கடந்த ஆண்டு படித்த முடித்த 1200 மாணவ, மாணவிகளின் மதிப்பெண் பட்டியலில் குளறுபடி !

Advertiesment
கரூர் அரசு கலைக்கல்லூரி – கடந்த ஆண்டு படித்த முடித்த 1200 மாணவ, மாணவிகளின் மதிப்பெண் பட்டியலில் குளறுபடி !
, ஞாயிறு, 8 நவம்பர் 2020 (18:33 IST)
தமிழக அளவில் தன்னாட்சி அங்கீகாரம் பெற்று பெயரெடுத்த அரசு கலைக்கல்லூரி மதிப்பெண் பட்டியலில் குளறுபடிகள் நடந்துள்ளது. 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சீறிய முயற்சியில் தமிழகத்தில் உள்ள தன்னாட்சி அங்கிகாரம் பெற்ற அரசு கலைக்கல்லூரிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி ஏராளமான அரசியல்வாதிகள், ஐ.ஏ.எஸ், நீதிபதி, வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் என்று பல்வேறு துறைகளை சார்ந்தவர்களை உருவாக்கிய பெருமை வாய்ந்த இந்த கல்லூரி கடந்த சில ஆண்டுகளாக நிர்வாக சீர்கேட்டினாலும், கல்லூரியின் தூய்மை உள்ளிட்டவைகளில் எல்லாமே மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதாக மேல் மட்ட அளவில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது அரங்கேரி உள்ள சம்பவத்தினால் கடந்த ஆண்டு இளங்கலை படித்த மாணவர்களிடையே ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
 
கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் உள்ள தேர்வுத்துறையில் பலமுறைகேடுகள் நடந்துள்ளன. இதற்கு மிக முக்கிய உதாரணமாக 2016 – 2019 இளம் பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கொடுக்கப்பட்ட mark sheet, consolidated mark sheet, provisional certificate போன்றவற்றில் முறைகேடுகள் மற்றும் குளறுபடுகள் என்று பல்வேறு நடந்துள்ளன. அப்போது படித்த 1200 மாணவ, மாணவிகளுக்கும் இந்த குளறுபடிகள் கொண்ட தவறான மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தெரியாமல், 2019 ல் ஒரு மாணவர் ஒருவர் மத்திய அரசின் வேலைக்கு சென்று பணியில் சேர்ந்து ஒரு வருடம் வெளி மாநிலத்தில் பணியாற்றி வரும் நிலையில், தற்போது அவருடைய சான்றிதழ்களை முழுமையாக அங்குள்ள மேல்மட்ட அதிகாரிகள் சரிபார்த்த போது, அந்த மாணவருடைய Grade Points மற்றும் cumulative grade points மதிப்பெண் பட்டியலில் வேறு மாதிரியாகவும், consolidated mark sheet மற்றும் provisional certificate ல் ஒரே மாதிரியாகவும் பதிவாகியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த வெளி மாநில உயரதிகாரிகள், உடனடியாக அவரை, என்ன மார்க் சீட் இது, இதில் குளறுபடி உள்ளது டூப்ளிகேட் மார்க்சீட்டா ? என்று கேட்டு, நீ வேலையை விட்டு செல், மார்க் சீட்டில் பல்வேறு முறைகேடுகள் உள்ளன என்று கூறி பணியை விட்டு நீக்கி விட்டார்கள் (பொதுநலன் மற்றும் அவர் நலன் கருதி அவரது பெயர் வெளியிடவில்லை) இந்நிலையில் மார்க் சீட்டினால் பாதிக்கப்பட்ட அந்த மாணவர் இந்த சம்பவத்தினை அவரோடு படித்த மற்ற மாணவர்களுக்கு தெரிவிக்க, அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களுடைய 2016-2019 ஆகிய வருடம் இளங்கலை மற்றும் அறிவியல் துறையினை சார்ந்த 16 துறைகளை சார்ந்த அனைத்து துறை மாணவ, மாணவிகளிடமும் இந்த தகவல்கள் விஸ்வரூபமெடுத்துள்ளது.

அந்த பேட்ஜில் படித்த அனைத்து மாணவர்களும் அவர்களுடைய மார்க்சீட்டினை பார்த்தால் அதில் குளறுபடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாணவ, மாணவிகள் வேலை வாய்ப்பினை இழந்து தங்களது வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு வேலை வாய்ப்பினையும் இழந்துள்ளனர்., இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் ராதாகிருஷ்ணன் என்பவரை தொடர்பு கொண்ட போது, அவர், இந்த விஷயத்தினை யாரிடமும் சொல்ல வேண்டாம், மீண்டும் அந்த மார்க்சீட்டினை திரும்ப எடுத்து நாளை (09-11-2020) காலை கரூர் அரசு கலைக்கல்லூரிக்கு எடுத்து வாருங்கள், அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு மாணவரும், மீண்டும் ரூ 1400 ஐ கட்டினால் மட்டுமே புதிய consolidated mark sheets, provisional certificates தரப்படும் என்றும் மாணவர்களை மிரட்டும் தோனியில் பேசியுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கு மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கடும் கண்டனத்தினை தெரிவித்தது மட்டுமில்லாமல், ஒரு மாணவர் ஒரு தடவை படித்து முடித்து பணம் கட்டி மார்க்சீட் வாங்கி வந்த நிலையில், அதே மாணவருக்கு தவறாக மார்க்சீட் கொடுத்தால் மீண்டும் கல்லூரி நிர்வாகமே தான் பொறுப்பேற்று புதிய consolidated mark sheets and provisional certificates உடனடியாக வழங்க வேண்டும், ஆனால் இந்த கரூர் அரசு கலைக்கல்லூரி நிர்வாகத்தில் அப்போது வேலை பார்த்த 2019 ம் ஆண்டு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான முனைவர் ரவிச்சந்திரன் மற்றும் துணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும், தாவரவியல் துறையின் உதவி பேராசிரியருமான முனைவர் கார்த்திகேயன் ஆகிய இருவரின் பேரும் இதில் அடிபடுகிறது., மேலும், இதற்கு முழு காரணமானவர்களும் கூட, இவர்களை உடனடியாக தமிழக அரசு இந்த இருவரையும் மேல் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, வருங்கால மாணவ, மாணவிகளுக்கு இது போல சம்பவம் தொடர்கதையாக நடைபெறாமல் இருக்கும் என்பதில் அச்சம் கொள்வார்கள், ஆகவே மாணவ, மாணவிகளின் நலனில் அக்கறை உள்ள இந்த அ.தி.மு.க அரசும், ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அரசும் உடனடியாக மாணவர்களின் மார்க்சீட்டில் குளறுபடி செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கின்றனர்.

சமூக நல ஆர்வலர்கள். மேலும் அந்த மாணவர் மேல் மேலும் பல்வேறு துறைகளில் சாதனை புரிய வேண்டும் என்கின்ற ஒரே நோக்கோடு அவரின் பெயர் வெளியிட வில்லை., ஆகையால் அந்த மாணவருடைய பெயர் போடவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றைய கொரோனா பாதிப்பு, தமிழ்கத்தில் 2334, சென்னையில் 601!