Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறைக்கு மாற்றம்

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (18:51 IST)
திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 19 அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் திமுக தொண்டர் ஒருவரை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கி அரை நிர்வாணமாக அழைத்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

 மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறி போராட்டம் நடத்தியது தொடர்பான மற்றொரு வழக்கிலும் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சிறையில் உள்ள ஜெயக்குமார் ஜாமின் கேட்டு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் ஜாமின் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம்.

இந்நிலையில், திமுக நிர்வாகியை தாக்கியதாக கைதாகி  பூவிருந்தவல்லி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் தற்போது புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments