அமைச்சர் செந்தில் பாலாஜி நன்றாக இருக்க வேண்டும் என்றும் அவர் நன்றாக இருந்தால்தான் அவரை அமலாக்க துறையினர் பேச வைப்பார்கள் என்றும் அப்போதுதான் நிறைய பேர் உள்ளே போவார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியுள்ளார்.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் கைது செய்து உள்ள நிலையில் அவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அமலாக்க துறையினர் அவரிடம் விசாரணை செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செந்தில் பாலாஜி நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு மனிதநேயத்துடன் நான் விரும்புகிறேன். அவர் நன்றாக இருந்து நன்றாக பேசினால் தான் அவர் பல உண்மைகளை சொல்வார்
அவரை அமலாக்க துறையினர் பேச வைப்பார்கள், அப்போதுதான் நிறைய பேர் உள்ளே செல்வார்கள் என்று தெரிவித்தார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.