Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐஐடிக்கு ரூ.110 கோடி நன்கொடை அளித்த முன்னாள் மாணவர்! ஆச்சரிய தகவல்..!

Siva
புதன், 31 ஜனவரி 2024 (07:31 IST)
சென்னை ஐஐடிக்கு முன்னாள் மாணவர் ஒருவர் 110 கோடி ரூபாய் நன்கொடை அளித்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை ஐஐடியில் படித்த பல மாணவர்கள் இன்று உலகின் பல நிறுவனங்களில் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நபர்களாக உள்ளனர் என்பதும் பலர் சொந்த நிறுவனம் நடத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே..

இந்த நிலையில் முன்னாள் மாணவர்கள் அவ்வப்போது சென்னை ஐஐடி நிறுவனத்திற்கு நன்கொடை அளித்து வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சென்னை ஐஐடியில் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பள்ளியை தொடங்குவதற்கு 110 கோடி ரூபாய் முன்னாள் மாணவர் சுனில் வாத்வானி என்பவர் நன்கொடை வழங்கியுள்ளார்.

ALSO READ: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு.. தமிழகத்தில் மீண்டும் மழை..!

இந்த மாணவர் சென்னை ஐஐடியில்  படித்து தற்போது மாஸ்டெக் டிஜிட்டல் நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை ஐஐடிக்கு இவ்வளவு பெரிய தொகை முன்னாள் மாணவர் ஒருவர் இதற்கு முன் வழங்காத நிலையில் இதுவே முதன்முறை என ஐஐடி இயக்குனர் காமகோடி பெருமிதம் கொண்டுள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments