Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

கோவை மருந்து கொடவுனில் தீ விபத்து!

Advertiesment
மருந்து கொடவுன்
, திங்கள், 11 ஜனவரி 2021 (12:29 IST)
கோவையில் மருந்து கொடவுன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மருந்து பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே ஒரு தனியார் நிறுவனத்தின் மருந்துக் கிடங்கு உள்ளது. அங்கு அதிகாலை குடோனில் இருந்து புகை வெளியேறியுள்ளது. பின்னர் தீயின் அளவு அதிகமாகி மொத்த கொடவுனும் எரிய ஆரம்பித்துள்ளது. இதையடுத்து அந்த இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீயை அணைத்துள்ளனர்.

ஆனால் அதற்குள் குடோன் முழுவதுமாக தீயால் அழிந்து, உள்ளே இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மருந்து பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக எல்லைக்குள் புகுந்து ரெளடித்தனம்: வாட்டாள் நாகராஜூக்கு கண்டனம்!