Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அந்த மாதிரி படம் பண்ண எனக்கும் ஆசை… லோகேஷிடம் சொன்ன விஜய்!

அந்த மாதிரி படம் பண்ண எனக்கும் ஆசை… லோகேஷிடம் சொன்ன விஜய்!
, திங்கள், 11 ஜனவரி 2021 (10:00 IST)
நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷிடம் கைதி மாதிரி படத்தில் நடிக்க தனக்கும் ஆசை எனக் கூறியுள்ளார்.

மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்போது விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.  இந்த படம் கொரோனா காரணமாக பல மாத தாமதத்துக்குப் பின்னர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை மறுநாள் வெளியாகியுள்ளது. இப்போது அந்த படத்துக்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.

அதில் நடிகர் விஜய் தன்னிடம் கைதி மாதிரி படத்தில் நடிக்க ஆசை என்று கூறியதாகக் கூறியுள்ளார். கைதி படம் ஒரு மாஸ் மசாலா திரைப்படம் என்றாலும் கதாநாயகி டூயட் பாடல்கள் என்ற க்ளிஷேக்கள் இல்லாத படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மாஸ்டர் படத்துக்கு பிறகு கமல் நடிக்கும் விக்ரம், ஒரு தெலுங்குப் படம் மற்றும் சூர்யாவை வைத்து சூப்பர் ஹீரோ படம் என லோகேஷ் செம்ம பிஸியான இயக்குனராக உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விருமாண்டி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!