தமிழக எல்லைக்குள் புகுந்து ரெளடித்தனம்
தமிழக-கர்நாடக எல்லையில் கன்னடச் சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தமிழக எல்லைக்குள் நுழைந்து தமிழில் உள்ள பெயர் பலகைகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள மலைப்பகுதி கிராமம் ராமபுரம் என்ற இடத்தில் உள்ள தமிழக பகுதியில் தமிழக அரசின் நெடுஞ்சாலைக்கு சொந்தமான பெயர் பலகைகள் தமிழில் வைக்கப்பட்டுள்ளது
இதில் தமிழ்நாடு மாநில எல்லை என்று எழுதப்பட்டுள்ள இந்த பெயர் பலகையை கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நேற்று மாலை திடீரென புகுந்து கன்னட மொழியில் ஏன் எழுதவில்லை என அந்தப் பெயர் பலகையை அடித்து உடைத்து ரவுடித்தனம் செய்து உள்ளனர்
தமிழக எல்லைக்குள் நுழைந்து தமிழக அரசுக்கு சொந்தமான பெயர் பலகையை வாட்டாள் நாகராஜ் குழுவினர் சேதப்படுத்தியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகராஜன் இந்த செயலுக்கு தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக எல்லைக்கு நுழைந்து தமிழ் பதாகைகளை அழிப்பதா? வாட்டாள் நாகராஜ் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டின் ஒற்றுமை கேள்விக்குறியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்