2021 சட்டப்பேரவை தேர்தல் பணிகளை அதிமுகவினர் இன்றே தொடங்க ஓபிஎஸ், ஈபிஎஸ் அழைப்புவிடுத்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டின் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக இப்போதே தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது. முன்னதாக திமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.
அதிமுக சமீபத்தில் தான் தேர்தல் வேட்பாளரையே முடிவு செய்துள்ளது. ஆனால், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவிக்கும் பணிகளையே துவங்கிவிட்டது. இந்நிலையில், 2021 சட்டப்பேரவை தேர்தல் பணிகளை அதிமுகவினர் இன்றே தொடங்க ஓபிஎஸ், ஈபிஎஸ் அழைப்புவிடுத்துள்ளனர்.
அதாவது நாளை அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி ஓபிஎஸ்-ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.