Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமதி அழகி பட்டம் வென்ற பெண்ணை ஆபாசமாக சித்தரிப்பு – திமுக உறுப்பினர் கைது !

Advertiesment
திருமதி அழகி பட்டம் வென்ற பெண்ணை ஆபாசமாக சித்தரிப்பு – திமுக உறுப்பினர் கைது !
, புதன், 27 நவம்பர் 2019 (08:35 IST)
கோவையில் மிஸஸ் இந்தியா எர்த் பட்டம் வென்ற அதிமுக பிரமுகரான சோனாலி பிரதீப் என்ற பெண்ணை ஆபாசமாக சித்தரித்ததாக  திமுக உறுப்பினர் ஒருவர் கைது செய்துள்ளார்.

கோவை மாநகராட்சி மேயர் பதவிக்காக அ.தி.மு.க-வில் சோனாலி பிரதீப் என்ற விருப்புமனு கொடுத்துள்ளார். வட இந்தியரான இவர், கோவை பகுதியில் மிகவும் பிரபலமானவர்.  இவர் திருமண பெண்களுக்கான அழகி போட்டியில் மிஸஸ் இந்தியா எர்த் என்ற திருமணமான பெண்களுக்கான அழகிப் போட்டி உள்ளிட்ட பல  பட்டங்களை வென்றவர்.

இந்நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்னர் சாய்பாபா காலணியில் உள்ள காவல்நிலையத்தில் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பரப்புவதாகவும் தன் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரிப்பதாகவும் புகார் ஒன்றை அளித்தார். அதை ஏற்று விசாரித்த போலிஸார் ஈரோடு மாவட்டம் 20-வது வார்டு தி.மு.க உறுப்பினர் ரகுபதி என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் சோனாலி குறித்து அவதூறாகப் பேசிய இணையதளம் ஒன்றின் மேலும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடனைத் திருப்பித் தராத சித்தி & காதலர் – அக்கா மகன் செய்த கொடூரம் !