Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடனைத் திருப்பித் தராத சித்தி & காதலர் – அக்கா மகன் செய்த கொடூரம் !

Advertiesment
கடனைத் திருப்பித் தராத சித்தி & காதலர் – அக்கா மகன் செய்த கொடூரம் !
, புதன், 27 நவம்பர் 2019 (08:28 IST)
தஞ்சாவூரில் அரசு பெண் ஊழியரையும் அவரது காதலரையும் மூன்று பேர் சேர்ந்த கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது.

தஞ்சாவூரில் வீட்டு வசதி வாரியத்துறையில் வேலைப் பார்த்து வந்த காமராஜ், 6 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டதால் அவரது வேலை அவரது மனைவி வனிதாவுக்குக் கொடுக்கப்பட்டது. வனிதாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வனிதாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் கனகராஜ் என்பவரோடு காதல் ஏற்பட்டு அவரும் அதே வீட்டில் சேர்ந்து வசித்து வந்துள்ளார்.

வனிதா குடும்ப செல்வுகளுக்காக தனது அக்கா மகன் பிரகாஷிடம் 2 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதில் ஒன்றரை லட்சத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளார். மீதி 50000 ரூபாய் பணத்தை இன்னும் தராமல் இழுத்தடித்துள்ளார். இது சம்மந்தமாக வனிதா மீது பிரகாஷ் காவல் நிலையத்திலும் புகாரளித்துள்ளார். இந்நிலையில் நேற்று கடனைத் திருப்பி வாங்குவதற்காக பிரகாஷ், தன் நண்பர் மற்றும் காதலியோடு  வனிதா வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது வனிதாவுக்கும் பிரகாஷுக்கும் இடையில் வாக்குவாதம் எழ, அங்கு இருந்த கனகராஜ் அதில் தலையிட பிரகாஷ் ஆத்திரமடைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர். அங்கிருந்து தலைமறைவாகியுள்ள் கும்பலைப் போலிஸார் தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த முறை உடைகிறதா சிவசேனா? மூத்த தலைவர் கட்சியில் இருந்து விலகல்!