Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் டெங்கு காய்ச்சல்: எச்சரிக்கை விடுக்கும் சுகாதாரத்துறை

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (19:32 IST)
சில மாதங்களுக்கு முன்னர் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி மக்களின் உரிரை குடித்தது. தற்போது, மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவி வருவத்தாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
சென்னையில் மாம்பலம், கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த இருவர் காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது அவர்களை சோதித்து பார்த்ததில் இருவரும் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 
 
இது குறித்து சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது பின்வருமாறு, சென்னையில் டெங்கு பாதிப்பு பரவுவது உண்மைதான். சென்னை மட்டுமல்லாது காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு துவகியிருக்கிறது. 
 
எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்தால்தான் டெங்கு பாதிப்பிலிருந்து தப்ப முடியும். கொசு ஒழிப்பில் அக்கறை எடுத்துக்கொள்வது, கொசுக்களை கட்டுப்படுத்துவதற்கு அவற்றின் வாழ்விடங்களை அழிப்பதே முக்கியமானது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments