இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தில் மழை அளவு எவ்வாறு இருக்கும் என்பதை பார்ப்போம்
அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள லூபன் புயல் மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றத்தழுத்த தாழ்வு ஆகியவற்றை அடுத்து இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று முதல் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இரண்டு புயல்களால் கடலோர பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்றும், வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் உள்பகுதியில் மழை பெய்யும் என்றும் வானிலை அறிக்கை கூறுவதால் தமிழகம் முழுவதும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் கனமழையும் சென்னையில் மிதமான மழையும் டெல்டா பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.