Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின்னர் இன்னொரு அதிரடி.. திட்டம் தமிழக அரசு திட்டம்..!

Siva
புதன், 5 மார்ச் 2025 (09:31 IST)
தொகுதி வரையறை காரணமாக, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் 31 தொகுதிகளாக குறைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், இது குறித்து ஆலோசனை செய்ய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி உள்ளார்.
 
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட 45 கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.
 
இந்த நிலையில், இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்திற்குப் பின்னர், அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து, தமிழகத்தில் தொகுதிகளை குறைக்கக் கூடாது என்று கோரிக்கை விட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும், இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும் ஜனாதிபதியிடம் நேரடியாக அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், இன்றைய கூட்டத்திற்குப் பின்னர் ஜனாதிபதியை சந்திக்கும் தேதி மற்றும் நேரம் கேட்கப்பட்டு, அதன் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில்வே தேர்வில் மோசடி.. 26 பேர் கைது.. ஒரு கோடி பணம் கைமாறியதா?

24 லட்சம் குழந்தைகளை காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன் காலமானார்! - மக்கள் இரங்கல்!

அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின்னர் இன்னொரு அதிரடி.. திட்டம் தமிழக அரசு திட்டம்..!

கும்பமேளாவில் புனித நீராடவில்லை என்ற குறையா? ஹோம் டெலிவரி செய்யும் உபி அரசு..!

ஒரு கும்பமேளாவில் கோடீஸ்வரனான படகோட்டி! - யோகி ஆதித்யநாத்தின் குட்டி ஸ்டோரி!

அடுத்த கட்டுரையில்
Show comments