Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அயோத்தில் குண்டுவைக்க ப்ளான்.. பயங்கரவாதியை சுற்றி வளைத்த போலீஸ்!

Advertiesment
Ayodhya

Prasanth Karthick

, புதன், 5 மார்ச் 2025 (08:45 IST)

அயோத்தியில் குண்டு வெடிப்பு நடத்த திட்டமிட்ட பயங்கரவாதி ஒருவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்தரபிரதேசத்தின் ஃபரிதாபாத் நகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடி வந்த 19 வயது வாலிபர் ஒருவரை சமீபத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் மில்கிபூரில் வசிக்கும் அப்துல் ரகுமான் என தெரியவந்துள்ளது. மேலும் விசாரித்ததில் பல அதிர்ச்சிக்குரிய தகவல்கள் தெரிய வந்துள்ளன.

 

அப்துல் ரகுமான் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ உடன் தொடர்பு கொண்டவர் என்றும், பயங்கரவாதிகளுக்கு ஸ்லீப்பர் செல்லாக செயல்படக்கூடியவர் என்றும் தெரியவந்துள்ளது. இவர் பைசாபாத்தில் இருந்து ஃபரிதாபாத் சென்று அங்கு ஒரு நபரிடம் இரண்டு கையெறிக் குண்டுகளை பெற்றுள்ளார். அவற்றை தான் வசித்த பகுதியில் மறைத்து வைத்துள்ளார்.

 

அந்த குண்டுகளுடன் அவர் அடுத்த நாள் அயோத்தி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரகுமானை மத்திய புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வருகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்.. பாஜக, தமாக மட்டுமே தவிர்ப்பு..!