Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்பமேளாவில் புனித நீராடவில்லை என்ற குறையா? ஹோம் டெலிவரி செய்யும் உபி அரசு..!

Siva
புதன், 5 மார்ச் 2025 (09:28 IST)
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் சமீபத்தில் நடந்த கும்பமேளா நிகழ்ச்சியில் சுமார் 65 கோடி பேர் கலந்துகொண்டு புனித நீராடியதாக தகவல் வெளியானது.

தற்போது, புனித நீராட முடியாதவர்களுக்கு உத்தரப் பிரதேச மாநில அரசு கும்பமேளா நீரை டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் நீராட முடியாத பக்தர்களுக்காக, தீயணைப்பு வாகனங்கள் மூலம் 31,000 லிட்டர் தண்ணீரை உத்தரப் பிரதேச அரசு 75 மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, நொய்டாவுக்கு 10,000 லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பக்தர்களுக்கு விநியோகிக்க ட்ரம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ட்ரம்களில் கும்பமேளா தண்ணீரை வாங்கி, வீட்டிலேயே புனித நீராடி கொள்ளலாம் என்பதால் ஏராளமான மக்கள் இந்த தண்ணீரை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அடுத்தடுத்த நகரங்களுக்கும் கும்பமேளா நீரை ஹோம் டெலிவரி செய்ய உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவில் புனித நீராடவில்லை என்ற குறையா? ஹோம் டெலிவரி செய்யும் உபி அரசு..!

ஒரு கும்பமேளாவில் கோடீஸ்வரனான படகோட்டி! - யோகி ஆதித்யநாத்தின் குட்டி ஸ்டோரி!

அயோத்தில் குண்டுவைக்க ப்ளான்.. பயங்கரவாதியை சுற்றி வளைத்த போலீஸ்!

முதல்வர் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்.. பாஜக, தமாக மட்டுமே தவிர்ப்பு..!

மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை எதிரொலி: ட்ரோன்கள் பறக்க தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments