Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோரமண்டல் ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துக - அன்புமணி ராமதாஸ்

Webdunia
சனி, 3 ஜூன் 2023 (12:39 IST)
கோரமண்டல் தொடர்வண்டி விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த அன்புமணி ராமதாஸ் இவ்விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவின்  ஷாலிமார்- சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (ஜூன் 2) சென்னை நோக்கி வந்தபோது, ஒடிஷா மாநிலம் பாலாசோர் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த ரயில் தடம்புரண்டு  மற்றொரு தண்டவாளத்தில் விழுந்ததில், பெங்களூரில் இருந்து கொல்கத்தா  நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் தடம்புரண்டு, கோரமண்டல் விரைவு ரயில் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த கோர விபத்தில் சிக்கி233 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 900க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இந்த விபத்து  பற்றி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’ஒதிஷா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில்   சென்னை கோரமண்டல் விரைவுத் தொடர்வண்டி உள்ளிட்ட மூன்று தொடர்வண்டிகள்  உள்ளிட்ட 3  தொடர்வண்டிகள் ஒரே இடத்தில் தடம் புரண்டு மோதிக்கொண்ட விபத்தில்  280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.   உயிரிழந்தவர்களில் 88 பேரும், காயமடைந்தவர்களின் 500-க்கு மேற்பட்டோரும் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருந்தவர்கள் என்பது  கூடுதல் துயரத்தை  ஏற்படுத்துகிறது.

விபத்தில் உயிரிழந்த  அனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்க மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். தொடர்வண்டி விபத்தில் காயமடைந்த அனைவரும் உடல்நலம் பெற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும்  தமிழ்நாடு அரசின் சார்பில் உரிய இழப்பீடு  வழங்கப்பட வேண்டும்.

தொடர்வண்டி விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.  அவர்கள் விபத்து நடந்த இடத்திற்கு செல்வதற்கு தேவையான  ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.

அறிவியலும், தொழில்நுட்பமும் வெகுவாக வளர்ச்சியடைந்துள்ள காலத்தில் முதல் விபத்து நடந்த பிறகு அடுத்தடுத்து மேலும் இரு  தொடர்வண்டிகள் செல்ல எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது.  விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments