ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணி 176 ரன்கள் அடித்து கொல்கத்தாவுக்கு 177 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 23, 16வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இன்றைய போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக லக்னோ ஜெயிண்ட் அணி விளையாடி வருகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணி பேட்டிங் செய்தது. இதில், காக் 28 ரன்னும், மான்கட் 26 ரன்னும், படோனி 58 ரன்னும், நிகோலஸ் 58 ரன்னும் அடித்தனர். எனவே 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் அடித்து கொல்கத்தா அணிக்கு 177 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
கொல்கத்தா அணி தரப்பில் அரோரா, தாகூர், ரைன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.ராணாவும், வருண் சக்ரவர்த்தியும் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.