Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சினிமாகாரங்களுக்கு புத்தியே கிடையாது - அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு

சினிமாகாரங்களுக்கு புத்தியே கிடையாது - அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு
, செவ்வாய், 17 ஜூலை 2018 (12:24 IST)
டி.ஆருக்கு மட்டுமல்ல சினிமா காரங்களுக்கே அவ்வளவாக புத்தி இருக்காது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
விஜய் நடித்துவரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஏனென்றால் அதில் விஜய் புகைபிடிப்பது போல் காட்சி இருந்தது.
 
இதுகுறித்து பேசியிருந்த டி.ராஜேந்தர் இவ்வளவு பேசும் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது புகையிலைக்கு தடை விதித்திருக்க வேண்டியது தானே என கேள்வி எழுப்பினார். அதேபோல் டி.ஆரின் மகன் சிம்பு இதுகுறித்து அன்புமணியிடம் விவாதிக்க தயார் என தெரிவித்திருந்தார்.
webdunia
இந்நிலையில் பாமக தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிய நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்புமணியிடம், ஏன் நீங்கள் மத்திய அமைச்சராக இருந்தபோது புகையிலைக்கு தடை விதிக்கவில்லை என டி.ஆர் கேள்வி கேட்கிறார் என கேள்வி எழுப்பப்பட்டது.
 
இதுகுறித்து பேசிய அன்புமணி புகையிலைக்கு தடை விதிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை, ஆனால் குட்காவிற்கு சுகாதாரத் துறையால் தடை விதிக்க முடியும். அதனால்தான் நான் அமைச்சராக இருந்தபோது குட்காவை தடை செய்தேன். புகையிலையை தடை செய்ய வேண்டுமென்றால் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம், வர்த்தக துறை அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் ஒப்புதலை பெற வேண்டும்.
 
இருந்தபோதிலும் புகையிலைகள் மீது, அதனால் வரும் அபாயங்களை வரைய வேண்டும் என உத்தரவிட்டதே நான் தான். அது இன்று முதல் நடைமுறையில் உள்ளது.
 
அப்படி இருக்கும் வேளையில், இது குறித்து நான் பல முறை விளக்கமளித்து விட்டேன். ஆனால் விடாமல் இதனை டி.ஆர் தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கு காரணம் டி.ஆருக்கு மட்டுமல்ல சினிமா காரங்களே கனவு உலகத்தில் வாழ்பவர்கள், அவர்களின் சிந்தனை வேறு மாதிரியாக இருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அவர்களுக்கு அவ்வளவாக புத்தி சரியாக இருக்காது என அதிரடியாக பேசினார் அன்புமணி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகவா லாரன்ஸ் என்னை மட்டுமில்லை - பீதி கிளப்பும் ஸ்ரீரெட்டி