Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்புவின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை: அன்புமணி

Advertiesment
அன்புமணி
, புதன், 11 ஜூலை 2018 (21:00 IST)
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார் என்பதும், அன்புமணியின் எதிர்ப்பு குறித்து கருத்து கூறிய சிம்பு, இதுகுறித்து அன்புமணியுடன் விவாதிக்க தயார் என்றும் கூறியதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சிம்புவின் சவால் குறித்து இன்று அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அன்புமணி, 'சிம்புவின் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதுகுறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் ஒரு கூட்டத்தை கூட்டினால் அதில் நான் விவாதிக்க தயார் என்று கூறினார்.
 
webdunia
மேலும் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நான் நடிக்க வேண்டாம் என்று கூறியது அவருடைய உடல்நலத்திற்கும் அவருடைய ரசிகர்களின் உடல்நலத்திற்கும் நல்லது என்று அக்கறையினால் கூறியதே தவிர தனக்கு விஜய்யை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
அன்புமணியின் வேண்டுகோளுக்கு இணங்கி நடிகர் சங்கம் இதுகுறித்த விவாத நிகழ்ச்சியை நடத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனமழை: தமிழகத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!