Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆழ்துளைகிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் கருவி: சென்னை மாணவர்கள் சாதனை

Advertiesment
ஆழ்துளைகிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் கருவி: சென்னை மாணவர்கள் சாதனை
, வெள்ளி, 8 நவம்பர் 2019 (07:44 IST)
ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழுந்து பலியாகும் சம்பவங்கள் இந்தியாவில் தொடர்கதையாகி வருகின்றன. சமீபத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து மீட்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியது 
 
இதனை அடுத்து ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தையை மீட்க கருவி கண்டுபிடிப்பவர்களுக்கு 10 இலட்ச ரூபாய் பரிசளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது
 
இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை மீட்க ஒரு கருவி கண்டுபிடித்த நிலையில், தற்போது சென்னை ஆவடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 4 மாணவர்கள் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர்
 
இந்த கருவியில் வயர்லெஸ் அதிநவீன கேமரா, சென்சார், எல்.இ.டி விளக்குகள் உள்பட பல நவீன அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கருவியில் உள்ள கைபோன்ற அமைப்பு ஆழ்துளையின் உள்ளே போய் குழந்தையை பிடித்து மேலே கொண்டு வரும் என்றும் அவ்வாறு வரும்போது குழந்தை கீழே விழாதவாறு இருக்க அதில் இன்னொரு கருவி இணைக்கப்பட்டிருக்கும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர். மேலும் இதனை அந்த மாணவர்கள் செய்முறையிலும் செய்து காட்டினார்
 
இந்த கருவியை ஆய்வு செய்து தமிழக அரசு ஒப்புதல் கொடுத்தால் இனிமேல் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் விழும் எந்த குழந்தையும் உயிரிழக்கப்படாமல் பாதுகாக்கப்படும் என்றும் அந்த மாணவர்கள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்கா கிளம்பினார் துணை முதல்வர்: உற்சாகமாக வழியனுப்பிய அதிமுகவினர்