Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா, கர்நாடகா, கோவை செல்லும் பேருந்துகள் நிறுத்தம் !

Webdunia
புதன், 18 மார்ச் 2020 (20:20 IST)
கேரளா, கர்நாடகா, கோவை செல்லும் பேருந்துகள் நிறுத்தம் !

சீனாவின் உருவெடுத்த கொரோனா இப்போது பல நாடுகளுக்கு பரவி பீதியை கிளப்பி வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனாவால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆம், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 தொட்டுள்ளது. மேலும் 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் சுமார் 150 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தகவல்கள் வெளியாகிறது. 
 
இந்நிலையில் ,சென்னையில்  மேலும் ஒருவருக்கு கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது,  மருத்துவக் குழு கண்காணிப்பில், இருக்கும் இளைஞரின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
 மேலும் இந்த கொரோனா வைஸால் பாதிக்கப்பட்டவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் எனவும் அவர் சென்னை ராஜீவாந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படு வருகிறது  என அமைச்சர் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், கிருஷ்ணகிரி செல்லும் ஓசூர் பெங்களூர் செல்லும் தமிழக  பேருந்துகள்  குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
 
மேலும் மார்ச்  31 ஆம்தேதி வரை  கேரளா, கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments