Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா மிகப்பெரிய விலை கொடுக்க காத்திருக்கின்றது: ராகுல்காந்தி ஆவேசம்

Webdunia
புதன், 18 மார்ச் 2020 (19:20 IST)
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதால் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 150 ஆக எட்டியுள்ளது
 
இந்த நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ’இதே ரீதியில் சென்றால் இந்தியா மிகப் பெரிய விலையை கொரோனாவுக்காக கொடுக்க வேண்டி நேரிடும் என்று ஆவேசமாக டுவிட் செய்துள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிராக மிகத் துரிதமாக செயல்பட வேண்டும் என்றும் ஆவேசமான நடவடிக்கைகள்தான் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் என்றும் ஆனால் மத்திய அரசின் திறமையின்மை மற்றும் தீர்க்கமின்மை காரணங்களால் இந்தியா மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ராகுல் காந்தி கடுமையாக எச்சரித்துள்ளார் 
 
ஏற்கனவே நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டி அளித்த போது ’மத்திய அரசு கொரோனா விவகாரத்தில் ஆரோக்கியம் இன்றி செயல்பட்டு வருவதாகவும், மத்திய அரசின் அலட்சியத்தால் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல்காந்தியின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments