சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி : விஜயபாஸ்கர்
கொரோனா வைரஸ் பீதி காரணமாக மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிகமாக ஈடுபடுவதால் அமேசான் ஒரு லட்சம் பேரை வேலைக்கு நியமித்துள்ளது.
சீனாவின் உருவெடுத்த கொரோனா இப்போது பல நாடுகளுக்கு பரவி கிளப்பி வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனாவால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆம், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 தொட்டுள்ளது. மேலும் 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுமார் 150 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தகவல்கள் வெளியாகிறது.
இந்நிலையில் ,சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது,
மருத்துவக் குழு கண்காணிப்பில், இருக்கும் இளைஞரின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்துள்ளாரெ, மேலும் இந்த கொரோனா வைஸால் பாதிக்கப்பட்டவர் வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர் (20 வயது ) எனவும் அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படு வருகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
அந்த இளைஞர் டெல்லியிருந்து சென்னை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.