Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காட்டை விட்டு வெளியே வந்த பாகுபலி யானை! – பீதியில் மக்கள்!

Advertiesment
Bahubali
, வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (15:45 IST)
கடந்த ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றி வந்து போக்கு காட்டிய பாகுபலி யானை மீண்டும் ஊருக்குள் நுழைந்துள்ளதால் பீதி எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் பல உள்ள நிலையில் சிலசமயம் யானைகள் வழிதவறி விவசாய நிலங்களுக்குள் புகுந்துவிடும் சம்பவங்களும் அவ்வபோது நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இப்படியாக ஊருக்குள் வந்த ஒற்றை ஆண் காட்டுயானை அப்பகுதியில் உள்ள நெல்லிமலை, வெல்ஸ்புரம், கல்லாறு, ஓடந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்து அங்கிருந்த விவசாய நிலங்களை துவம்சம் செய்தது.

மக்கள் அதை பாகுபலி யானை என அழைத்து வந்த நிலையில் அந்த சமயம்  பாகுபலியை விரட்டுவதற்காக கும்கி யானைகள், காவலர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். சில நாட்கள் போக்கு காட்டிய பாகுபலி பின்னர் தானாகவே காட்டுக்குள் சென்று விட்டது.

இந்நிலையில் தற்போது ஒரு ஆண்டு கழித்து மீண்டும் வெளியே தலைகாட்டியுள்ளது பாகுபலி. ஊட்டி – கோத்தகிரி சாலையில் சுற்றி திரியும் பாகுபலி யானையால் மக்கள் பீதியில் உள்ளனர். திடீரென யானை சாலைகளில் தென்படுவதால் மக்கள் வாகனங்களை நிறுத்தி யானை கடந்தபின் செல்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பறிபோகிறது மஹிந்தா ராஜபக்சே பதவி: கோத்தபய ஒப்புதல்