டிஆர் பாலுவை நானே குறுக்கு விசாரணை செய்ய போகிறேன்: அண்ணாமலை பேட்டி..!

Mahendran
திங்கள், 13 அக்டோபர் 2025 (15:22 IST)
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஆஜரான பின்னர், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
 
அப்போது அவர், தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு தனக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில், நிச்சயம் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், "அடுத்த குறுக்கு விசாரணை நவம்பர் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும்போது, நானே நேரில் ஆஜராகி டி.ஆர். பாலுவிடம் குறுக்கு விசாரணை நடத்தப் போகிறேன். அவர் அரசியலுக்கு வந்தது முதல், அவரது 40 ஆண்டுகால அரசியல் வரலாறு குறித்து நீதிமன்றத்தில் தெரியப்படுத்துவேன்" என்று அண்ணாமலை அதிரடியாகக் கூறினார்.
 
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்து பேசிய அண்ணாமலை, "இந்த வழக்கு ஒரு கட்சி சம்பந்தப்பட்டது அல்ல; 41 உயிர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு. எனவே, இதில் சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தவறு செய்தவர்கள் யார் சார்ந்த நபராக இருந்தாலும், கரூர் துயர சம்பவத்தில் நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
 
மேலும், "ஓர் அரசியல் தலைவராக சீமானை நான் மதிக்கிறேன். ஆனால், இந்த வழக்கில் அவர் ஏன் பதற்றப்படுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. 
 
எதிர்க்கட்சியாக இருந்தபோது சிபிஐ விசாரணையை கேட்ட திமுக, இப்போது ஏன் அதை வேண்டாம் என்கிறது?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 
 
கரூர் வழக்கில் போலியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார். 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments