Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை விட்டு ஜி.கே.வாசன் எங்கேயும் சென்றதில்லை: அண்ணாமலை புகழாரம்

Mahendran
திங்கள், 26 பிப்ரவரி 2024 (11:33 IST)
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு என தனிப்பெருமை ஒன்று உள்ளது. பிரதமர் மோடியை விட்டு வாசன் எங்கேயும் சென்றதில்லை. தமிழ்நாட்டில் ஆரம்பத்தில் இருந்து மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் ஜி.கே.வாசன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.

பாஜக கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து வாழ்த்திய பிறகு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார். அப்போது

பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் இது ஒரு வெற்றி கூட்டணியாக மாறி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ஆரம்பம் முதல் பிரதமர் மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஜிகே வாசன் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார் என்றும் இரு கட்சிகள் இடையே நடந்த கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனை அடுத்து ஜி கே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் பாஜக கூட்டணியில் இணைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பாரிவேந்தர் கட்சி மற்றும் ஏசி சண்முகம் கட்சி பாஜக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் தற்போது ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டணியில் தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகளும் இணைந்து விட்டால் வலுவான கூட்டணியாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments