Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காங்., தலைவராக செல்வப்பெருந்தகை பதவி ஏற்பது எப்போது?

Selvaperunthagai

Sinoj

, செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (18:24 IST)
தமிழக காங்கிரஸின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.,  நாளை (21.2.2024) புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் பொறுப்பினை ஏற்றுக் கொள்வார்.
 
விரைவில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், இதற்காக,  பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.
 
சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்குப் பதிலாக செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ அக்கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்டார்.
 
இந்த நிலையில்,  நாளை செல்வப் பெருந்தகை அக்கட்சியின் தலைவராகப் பொறுப்பு ஏற்கவுள்ளதாக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 
 
''அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பு வகித்த திரு. கே.எஸ். அழகிரி அவர்களிடமிருந்து புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் 21.2.2024 புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் பொறுப்பினை ஏற்றுக் கொள்வார். இந்நிகழ்வில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம், எம்.பி., டாக்டர் ஏ. செல்லக்குமார், எம்.பி., திரு. பி. மாணிக்கம் தாகூர், எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு. கே.வீ. தங்கபாலு, திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன், எம்.எல்.ஏ., திரு. சு. திருநாவுக்கரசர், எம்.பி., திரு. குமரி அனந்தன், திரு. எம். கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்பார்கள். 
 
அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், நிர்வாகப் பெருமக்கள், இயக்க நண்பர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.பி. ஆனார் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா..! மீண்டும் மாநிலங்களவை எம்.பி-யான எல்.முருகன்..!!