Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2026ல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால், 2024ல் பாஜக வெற்றி பெற வேண்டும்: அண்ணாமலை

Advertiesment
Annamalai

Siva

, புதன், 21 பிப்ரவரி 2024 (09:01 IST)
2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திவரும் என் மண் என் மக்கள் யாத்திரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய நிலையில் தற்போது அவர் செங்கல்பட்டு தாம்பரம் போன்ற பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார் 
 
இந்த நிலையில் திருப்போரூரில் நேற்று அவர் பேசிய போது ’திமுக கடந்த 33 மாத ஆட்சியில் எந்த வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தப்படவில்லை என்றும் தேர்தல் வாக்குறுதிகளை 20% கூட நிறைவேற்றவில்லை என்றும் ஆனால் கனவுலகில் வாழும் முதலமைச்சர் 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறி வருகிறார் என்றும் தெரிவித்தார் 
 
பாஜக கொடுத்த 295 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் எனவே மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 400 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் 2024 தேர்தலில் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்றும் ஊழலுக்கு இலக்கணமாக இருக்கும் திராவிட கட்சிகள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் பேசினார்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை பரங்கிமலை பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்?