Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

Advertiesment
Vijay Poster

Prasanth Karthick

, ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (12:20 IST)

நடிகர் விஜய்யின் த.வெ.க கட்சி மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில் அவரது தொண்டர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.

 

 

நடிகர் விஜய் தனது அரசியல் வருகையை அறிவித்து கட்சி பெயர், கட்சிக் கொடி ஆகியவற்றை அறிவித்தது முதலே தமிழக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த மாதத்தில் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு பெரிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி கிடைப்பதற்கு காலதாமதம் ஆன நிலையில் இறுதியாக அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்காக விக்கிரவாண்டியில் ஏற்பாடுகளை மேற்கொள்ள த.வெ.க குழு அமைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் த.வெ.க கட்சியினர் மாநாடு குறித்த எதிர்பார்ப்பில் போஸ்டர்களை ஒட்டி இப்போதே ட்ரெண்ட் செய்யத் தொடங்கியுள்ளனர்.
 

 

அப்படியாக திருச்சியில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்றில் “தமிழக அரசியல் மூன்றெழுத்தின் (ஈ.வெ.ரா, அண்ணா, எம்ஜிஆர்)-ன் அடுத்த அரசியல் வாரிசே! வருக வெல்க!” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 2024ல் எழுச்சி மாநாடு, 2026ல் தமிழ்நாடு என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!