Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்யின் த.வெ.க மாநாடு.. ஒருவழியாக முடிவான தேதி! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Advertiesment
Thamizhaga Vetri Kazhagam

Prasanth Karthick

, வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (10:15 IST)

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறப்போகும் இடம் மற்றும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்..:

 

என்‌ நெஞ்சில்‌ குடியிருக்கும்‌ தோழர்களே,

 

தமிழக வெற்றிக்‌ கழகத்தின்‌ கொடி அறிமுகப்படுத்திய நாள்‌ முதல்‌, நம்‌ கழகத்‌ தோழர்களின்‌ எண்ணங்ங்களுக்கு ஏற்பவும்‌ தமிழ்நாட்டு மக்களின்‌ பேரன்புடனும்‌ பேராதரவுடனும்‌ நமது அரசியல்‌ வெற்றிக்கான களம்‌ விரிவடைந்துகொண்டே வருகிறது.

 

கழகக்‌ கொடியேற்று விழாவின்போது, நமது முதல்‌ மாநில மாநாட்டுத்‌ தேதியை ௮றிவிப்பதாகக்‌ கூறியிருந்தோம்‌.

 

நமது மக்களின்‌ பெரும்‌ எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்‌ வகையில்‌, தமிழக அரசியல்‌ களத்தில்‌ புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின்‌ கொள்கைத்‌ தலைவர்கள்‌, கொள்கைகள்‌ மற்றும்‌ கொள்கை சார்ந்த செயல்‌ திட்டங்களைப்‌ பிரகடனப்படுத்தும்‌ தமிழக வெற்றிக்‌ கழகத்தின்‌ முதல்‌ மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர்‌ மாதம்‌ 27ஆம்‌

தேதி (27.10.2024), மாலை 4 மணி அளவில்‌ விழுப்புரம்‌ மாவட்டம்‌, விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில்‌ நடைபெற உள்ளது என்பதைப்‌ பெருமகிழ்வுடன்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.

 

நமது வெற்றிக்‌ கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப்‌ போகும்‌ கொள்கைகளையும்‌ நாம்‌ அடையப்‌ போகும்‌ இலக்குகளையும்‌ முழங்கும்‌ அரசியல்‌ திருவிழாவாகவும்‌ பெருவிழாவாகவும்‌ கொண்டாடப்படவுள்ளது.

 

தமிழக மக்களின்‌ மனங்களைத்‌ தீர்க்கமாக வெல்லும்‌ நோக்கில்‌ அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப்‌ பணிகள்‌ ஏற்கெனவே நடந்துவரும்‌ நிலையில்‌, அதற்கான களப்பணிகளும்‌ தொடங்கப்பட உள்ளன என்பதையும்‌ உங்களிடம்‌ பகிர்ந்துகொள்கிறேன்‌.

 

இந்த மாநாட்டில்‌ இருந்து வலிமையான அரசியல்‌ பெரும்பாதையை அமைப்போம்‌! இந்நிலையில்‌, நமது முதல்‌ மாநில மாநாட்டை எல்லா வகையிலும்‌ வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாட்டு மண்ணைச்‌ சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின்‌ ஆதரவையும்‌ ஆசிகளையும்‌ உரிமையுடன்‌ வேண்டுகிறேன்‌

 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்போ நான் பெரும் சிக்கலான இடத்தில் நின்றுக் கொண்டிருக்கிறேன்! - திருமாவளவன்!