Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

sekar babu

Siva

, ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (11:54 IST)
திருப்பதி லட்டில் நெய் சேர்ப்பதற்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெறுவதாகவும், அது மட்டும் இன்றி கோவிலின் புனித தன்மை கெட்டுவிட்டதால் தோஷம் தீர்க்க சில சடங்குகள் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருப்பதியை அடுத்து பழனியில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் குறித்தும் சில சர்ச்சை கூறிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, பாஜகவை சேர்ந்த பிரபலங்கள் பழனி பஞ்சாமிர்தத்திலும் கலக்கப்படும் நெய்யிலும் கலப்படம் இருப்பதாக கூறிய நிலையில், இது தவறான தகவல் என்று இம்மாதிரியான தகவலை கூறுபவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மேலும், பழனியை பொருத்தவரை, பஞ்சாமிர்தம் தயாரிக்க முழுக்க முழுக்க ஆவின் நெய் தான் பயன்படுத்தப்படுகிறது என்றும் அதிகமாக தேவைப்பட்டால் தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பழனி பஞ்சாமிர்தம் அனைத்து சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, தரமாக வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்."

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!