அமைச்சர் செல்லூர் ராஜூவின் அதிமுக நிகழ்ச்சியில் பங்குபெற்ற கந்துவட்டி அன்புச்செழியன்

Webdunia
திங்கள், 26 பிப்ரவரி 2018 (08:21 IST)
கந்துவட்டிப் புகாரில் சிக்கிய மதுரையைச் சேர்ந்த பைனான்சியர் அன்புச்செழியன், செல்லூர் ராஜூவின் தலைமையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் பங்குபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் சமீபத்தில் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு பைனான்சியர் அன்புச்செல்வன் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார் அசோக்குமார். அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவான அவரை போலீஸார் தேடி வந்தனர். இதனிடையே அன்புச்செழியன் தன்னுடைய ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார்.
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு, அமைச்சர் செல்லூர் ராஜூவின் தலைமையில் மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது, இதில் கந்துவட்டி புகாரில் சிக்கிய அன்புச்செழியன் பங்குபெற்றார். அவர் மேடையில் அமர்ந்திருந்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற அமைச்சர் செல்லூர் ராஜூவின் குடும்ப நிகழ்ச்சியில் அன்புச்செழியன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments