Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வர் பழனிச்சாமி அவசர ஆலோசனை: உளவுத்துறை, போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்பு!

Advertiesment
முதல்வர் பழனிச்சாமி அவசர ஆலோசனை: உளவுத்துறை, போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்பு!
, புதன், 27 டிசம்பர் 2017 (20:10 IST)
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பானிச்சாமி இன்று மாலை உளவுத்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அவரச ஆலோசனை நடத்தியுள்ளார்.
 
இன்று மாலை முதல்வர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் டிஜிபி ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், ஐஜி சத்யமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
இந்த அவசர ஆலோசனையில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆர்கே நகர் தேர்தலில் ஆளும் கட்சியின் தோல்வி, புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுப்பது உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்களின் 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் வேளையில் இந்த அவசர ஆலோசனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியல் கட்சி இல்லை, பவுண்டேஷன் தான்: ரஜினியின் அதிரடி முடிவு?