எச்சில் துப்பியதால் பெண்ணை கொலை செய்த வாலிபர்கள்

Webdunia
திங்கள், 26 பிப்ரவரி 2018 (07:52 IST)
தஞ்சை அருகே மகன் எச்சில் துப்பியதால் நடந்த பிரச்சனையை தடுக்கப்போன அவரது தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மணல்மேடு மேலத்தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி இந்திராணி (48). இவர்களது மகன் சதீஷ்கண்ணா நேற்று மாலை கோவிலில் அமர்ந்து கொண்டிருந்தபோது எச்சில் துப்பினார். அது தெரியாமல் மணல்மேடு ஓடக்கரை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் மீது விழுதிருக்கிறது. இதற்காக சதீஷ்கண்ணா சுரேஷிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.
 
ஆனாலும் ஆத்திரமடங்காத சுரேஷ், அவரது சகோதரர்களுடன் சேர்ந்து, சதீஷ்கண்ணாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது சதீஷ்கண்ணாவின் தந்தை கோவிந்தராஜ், தாய் இந்திராணி மற்றும் பாட்டி சாம்பல்அம்மாள் ஆகியோர் சத்தம் போட்டு சண்டையை தடுத்தனர். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் மற்றும் அவருடன் வந்தவர்கள் அரிவாளால் சதீஷ்கண்ணா, இந்திராணி, கோவிந்தராஜ், மற்றும் சாம்பள் அம்மாள் ஆகியோரை வெட்டினர்.
 
இதில் இந்திராணிக்கு தலையில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே இந்திராணி பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இதுகுறித்து தஞ்சை  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சுரேஷ் மற்றும் அவரது சகோதரர்கள் மீது வழக்கு பதிந்துள்ள போலீஸார் தப்பியோடிய அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கணவன் மற்றும் மகன் முன்னிலையிலேயே பெண் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments