பிரதமர் வாய்ப்பு வந்தால் விடவேண்டாம், அதையும் ஒரு கை பார்ப்போம்: அன்பில் மகேஷ்

Siva
ஞாயிறு, 21 ஜனவரி 2024 (17:31 IST)
பிரதமர் பதவி வாய்ப்பு வந்தால் அதை விட வேண்டாம் அதையும் ஒரு கை பார்த்து விடுவோம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
சேலத்தில் இன்று திமுகவின் இளைஞர் மாநாடு நடைபெற்று வரும் நிலையில் அதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட  பல திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். 
 
இந்த நிலையில் இந்த விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் ’இந்தியா கூட்டணி வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அப்போது நமது தலைவர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கை காட்டுபவர் தான் பிரதமர் என்றும் கூறினார். 
 
ஒருவேளை பிரதமர் பதவி நம்மை தேடி வந்தால் அதை விட்டு விட வேண்டாம், அதையும் ஒரு கை பார்த்து விடுவோம், இந்தியா மட்டுமின்றி உலக அரங்கில் நமது திறமையை நிரூபிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முதல்வர் ஸ்டாலின் இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள நடிகை பாலியல் வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு.. எத்தனை ஆண்டு சிறை?

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கிஸ் முகமதி கைது: ஈரான் அரசு அதிரடி..!

16% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழகம் முதலிடம்: ரிசர்வ் வங்கி தகவல்

மகளிர் உரிமை தொகை இன்னும் உயரும்.. முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு..!

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

அடுத்த கட்டுரையில்
Show comments