சேலத்தில் இன்று நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் முக்கியமான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சேலம் திமுக இளைஞரணி மாநாடு திட்டமிடப்பட்டு பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. விளையாட்டுத்துறை அமைச்சர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கையாள முன்னோட்டமாக கருத்தப்படும் இந்த மாநாட்டில் திமுக இளைஞரணி சார்பில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதன்படி, பாஜகவின் மதவாத அரசியலுக்கு எதிரான பரப்புரையை திமுக இளைஞரணி மேற்கொள்ளும். ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்கிட தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
கல்வி, மருத்துவத்தை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தராக செயல்பட வேண்டும்.
நீட் தேர்விலிருந்து உறுதியாக விலக்கு பெற்றே தீருவோம், என மாநாட்டில் தீர்மானங்கள் மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.