தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தனுஷ்கோடியில் பயணம் செய்து புண்ணிய ஷேத்திரங்களில் வழிபாடு செய்து வருகிறார்.
நாளை ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். ஜனவரி 19ம் தேதி தொடங்கிய கேலோ இந்தியா போட்டிகளை சென்னையில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பின்னர் ராமேஸ்வரம் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
இன்று தனுஷ்கோடியில் உள்ள ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து தனுஷ்கோடியின் அரிச்சல் முனை பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு கடற்கரையில் பூக்கள் தூவியதோடு, மூச்சு பயிற்சி தியானமும் மேற்கொண்டார்.
ராமாயண இதிகாசப்படி அரிச்சல் முனை பகுதியில் இருந்துதான் ராமர் இலங்கைக்கு வானர கனங்கள் மூலம் பாலத்தை நிர்மாணித்தார் என சொல்லப்படுகிறது. அதனால் அந்த பகுதியில் பிரதமர் மோடி பூக்களை தூவி வணங்கியுள்ளார்.