Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் மோடிக்கு ஆசி வழங்கிய குஷ்பு மாமியார்.. புகைப்படம் வைரல்..!

பிரதமர் மோடிக்கு ஆசி வழங்கிய குஷ்பு மாமியார்.. புகைப்படம் வைரல்..!

Siva

, ஞாயிறு, 21 ஜனவரி 2024 (13:15 IST)
நடிகை மற்றும் பாஜக பிரமுகர் குஷ்புவின் மாமியார் பிரதமர் மோடிக்கு ஆசி வழங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
சமீபத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்த நிலையில் அவரை பல பாஜக பிரமுகர்கள் சந்தித்தனர். அந்த வகையில் நடிகை குஷ்பூ தனது மாமியார்  தெய்வானை சிதம்பரம் பிள்ளை என்பவருடன் சந்தித்தார். 
 
இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி குஷ்புவின் மாமியாரிடம் ஆசி பெற்றார். இது குறித்த புகைப்படங்களை நடிகை குஷ்பு தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் தனது மாமியார் பிரதமரின்  தீவிர ரசிகை என்றும் இந்த 92 வயதில் அவர் பிரதமர் மோடியை சந்தித்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார் என்பதும் அவரது நீண்டநாள் கனவு நனவாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். 
 
பிரதமர் மோடி, தனது மாமியாரை அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்றார் என்றும் அவர் ஏன் உலகம் முழுவதும் ஒரு பேசப்படும் நபராகவும், ஆசீர்வதிக்கப்பட்டவராக இருக்கிறார் என்பது புரிந்தது என்று தெரிவித்தார்.
 
 பிரதமரை பார்த்ததும் என் மாமியாரின் கண்களில் ஒரு குழந்தையை போன்ற மகிழ்ச்சியை நான் பார்த்தேன் என்றும் இந்த வயதில் அவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பதை தவிர எனக்கு வேறு என்ன வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இருந்து அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்..!