Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமராவதி ஆறு முற்றிலும் மாசு :இறைச்சிக்கழிவுகள் முற்றிலும் கிடப்பதினால் மக்கள் அதிர்ச்சி

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2019 (21:08 IST)
கரூர் மாவட்டத்தில் அடுத்த கூவமான ஆறு ? ஏற்கனவே அமராவதி ஆறு முற்றிலும் மாசு அடைந்த நிலையில் தற்போது நங்காஞ்சி ஆறும் மாசுகள் அடைந்ததோடு, இறைச்சிக்கழிவுகள் முற்றிலும் கிடப்பதினால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கரூர்  மாவட்டம்., அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாயும் நங்காஞ்சி ஆற்றில் சாக்கடை கழிவு  நீர், இறைச்சி கழிவுகள், மருத்துவக்கழிவுகள், பள்ளப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மட்டுமில்லாமல், அந்த பகுதி மக்களின் கழிவு நீர் அப்படியே சுத்திகரிக்கப்படாமல், அப்படியே ஆற்றில் கலப்பதினால்,. இந்த நங்காஞ்சி ஆறு தற்போது விஷத்தன்மை மிக்க ஆறாகவும், மிகவும் சுற்றுச்சூழல் முற்றிலும் கெட்டுப்போன தன்மை கொண்ட ஆறாகவும் மாறியுள்ளது. மேலும், இந்த ஆற்றில் பாயும் இந்த விஷ நீரினால்  பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி ஆகிய பகுதி மக்களுக்கு தொற்று நோய் உருவாகும் அபாயமும் எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன் சத்திரம் வட்டம், வடகாடு மலைப்பிரதேசங்களில் உருவாகும் சிற்றாறுகள், பரப்பலாறு அணையில் தேங்கி, அந்த அணையிலிருந்து உருவாகி வருவது தான் நங்காஞ்சி ஆறு ஆகும், இந்த ஆறு விருப்பாச்சி, அரசப்பபிள்ளைப்பட்டி, சவ்வாதுப்பட்டி, இடைய கோட்டை பகுதியின் வழியாக வந்து, பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி வழியாக சென்று குடகனாற்றில் கலந்து அமராவதி ஆற்றுடன் கலக்கின்றது. இந்த நங்காஞ்சி ஆறு. அரவக்குறிச்சி  தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி அரவக்குறிச்சி  உள்ளிட்ட  பகுதி  மக்களுக்கு  ராஜபுரம்  பகுதியில்  நங்காஞ்சி ஆற்றின்  நடுவே ராட்சத மின்மோட்டார் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 13 ஆண்டு காலமாக நங்காஞ்சி ஆற்றை தூர் வாராமல் பள்ளபட்டி., பேரூராட்சி நிர்வாகம்  மாவட்ட  நிர்வாகம்  மற்றும் பொதுப்பணித்  துறை  நிர்வாகம்  கண்டு கொள்ளாததால்  தற்போது  கழிவுநீர் சென்று கொண்டிருக்கிறது.,

 பள்ளப்பட்டி அரவக்குறிச்சி வழியாக கடந்து செல்லும்  இந்த  நங்காஞ்சி ஆறு ., பள்ளபட்டி பேரூராட்சிக்குட்பட்ட சுமார் 40 ஆயிரம் குடும்பங்கள் வீடுகள் தோறும் வெளியேறும் கழிவுநீர் மற்றும் ஏராளமான இறைச்சிக்கழிவுகள் என்று ஒட்டு மொத்த கழிவுகளும், இந்த நங்காஞ்சி ஆற்றில் தான் கலக்கின்றது. தற்போது முற்றிலும் மாசு அடைந்த இந்த நங்காஞ்சி ஆற்றினை தமிழக அரசின் குடி மராமத்து பணி திட்டத்தின் கீழ் சுத்தம் செய்ய வேண்டுமென்றும் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் பலமுறை  மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும், இன்றும் செவிசாய்க்காமல் மாவட்ட நிர்வாகம் மௌனம் காத்து வருகிறது, பள்ளப்பட்டி பேரூராட்சியும் கழிவு நீரை சுத்தகரிக்காமல் அப்படியே ஆற்றில் விடுவதினால், பள்ளப்பட்டி ராஜபுரம் பகுதியில் மிகப்பெரிய கேணி அமைத்து  தற்போது ஐந்து  நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தெருக் குழாய்களில் பைப் பழுது ஏற்பட்டுள்ளது என்று கூறி அடிக்கடி பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்க மறுத்து வருகிறது.  2006 க்கு பின் நங்காஞ்சி ஆற்றில் கடந்த 11 ஆண்டு காலமாக தூர்வாராமல் அப்படியே இருப்பதினால் இந்த ஆற்றினை எந்த வித கவனிப்பாறின்றி அரசியல் வாதிகளும் விட்டு விட்டுள்ளனர். மேலும்,  அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் முதலில் பொதுமக்களிடம் அது என்னவென்றால் நங்காஞ்சி ஆற்றை தூர்வாரி சுத்தம் செய்து இப்பவே மக்களுக்கு நல்ல முறையில் குடிநீர் வழங்கப்படும் என்று தான் வாக்கு சேகரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சென்னை கூவத்தினை தொடர்ந்து கரூரில் பாயும் அமராவதி ஆறு தான் கூவமாக காட்சியளித்த நிலையில், இந்த கரூர் மாவட்டத்தில் மற்றொரு இரண்டாவது கூவமாக நங்காஞ்சியாறு தோற்றம் அளிப்பதையும் பொதுமக்கள் மிகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

 ஷேக்பரித் , பள்ளப்பட்டி ,மக்கள்,
சதீஸ்குமார் , பள்ளப்பட்டி , மக்கள்,

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு: ஜனவரி 1 முதல் அமல்..!

இளையராஜா ஒரு இசை கடவுள்,, கடவுளுக்கு கோயிலுக்கு போகணும்னு அவசியமே இல்லை: கஸ்தூரி

ஆகமம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது.. இளையராஜா விவகாரம் குறித்து ஆன்மீக பேச்சாளர்..

நான் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல... ஆண்டாள் கோவில் சம்பவம் குறித்து இளையராஜா

ஆரஞ்சு அலர்ட் மட்டுமின்றி ஆப்பிள் அலர்ட்டுக்கும் செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும்: அமைச்சர் துரைமுருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments