Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமாவளவன் மீது போலீஸார் வழக்குப் பதிவு ! தொண்டர்கள் அதிர்ச்சி

திருமாவளவன் மீது போலீஸார் வழக்குப் பதிவு ! தொண்டர்கள் அதிர்ச்சி
, ஞாயிறு, 16 ஜூன் 2019 (13:33 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான திருமாவளவன் மீது சென்னை அசோக்நகர் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவைப் பொதுத்தேர்தலின் போது பேசிய நடிகர் கமல்ஹாசன் : சுதந்திர இந்தியாவின் முதல் இந்துத் தீவிரவாதி கோட்சே என்று கூறி பரபரப்பை கிளப்பினார். இவரது பேச்சுக்கு  நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.பின்னர் கமல்ஹாசன் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
 
கமலின் இந்தப் பேச்சுக்கு ஆதரவாக விசிக கட்சித்தலைவர் திருமாவளவன் பேசினார். முள்ளிவாய்க்கால் 10 ஆண்டு நினைவு தினம் கடந்த மே 18 ஆம் தேது சென்னையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட திருமாவளவன் கூறியதாவது : கமலின் கருத்தை நான் ஆதரிக்கிறேன். பாஜகவின் சனாதனக் கொள்கையில் நான் தீவிர எதிர்ப்பு கொண்டதால் நான் கமலின்  கருத்தை ஆதரிக்கிறேன். கமல்ஹாசன் கோட்சேவை தீவிரவாதி என்று கூறியதற்கு ஒருபடி மேலாக பயங்கரவாதி என்று கூறியிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்,

மேலும்,காந்தியும் ஒரு தீவிரவாதிதான். அவர் மூச்ச்சுக்கு 300 முறை ஹேராம் என்பார். அவருக்கு முன்வினை, கர்மவினை, மீது நம்பிக்கை உண்டு. கர்மவினை மீது யார் நம்பிக்கை கொண்டாலும் அவர் ஒரு தீவிரவாதிதான் என்று தெரிவிதார். இவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவியது. 
 
இதனையடுத்துத் திருமாவளவனின் இந்தப்பேச்சுக்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.பின்னர் இந்து மக்கள் முன்னணி சார்பில் அசோக்நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து திருமாவளவன் மீது இரு பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது விசிக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண் காவலரை எரித்துக் கொன்ற சக போலீஸ்காரர் : திடுக்கிடும் சம்பவம்