Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’கடன் தொகை ’ கொடுப்பது என்ன சொல்கிறார் அம்பானி ?முதலீட்டாளர்கள் கலக்கம்!

Advertiesment
’கடன் தொகை ’ கொடுப்பது என்ன சொல்கிறார்  அம்பானி ?முதலீட்டாளர்கள் கலக்கம்!
, செவ்வாய், 11 ஜூன் 2019 (19:22 IST)
திருபாய் அம்பானியால் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் ரிலையன்ஸ். உலகின் இதன்  பெயர் மூலை முடுக்கெல்லாம்  பிரபலம். ரிலையன்ஸ் ஸ்தாபகர்  திருபாய் அம்பானி இறந்த பின்னர் அவரது இருமகன்களும் ரிலையன்ஸ் குழுமத்தை இரண்டாகப் பிரித்துக்கொண்டனர்.
இந்நிலையில் மூத்தமகன் முகேஷ் அம்பானி வெற்றிகரமாக பிசினஸ் செய்துகொண்டுள்ளார். இந்தியாவில் நம்பர் 1 பணக்காரரும் அவர்தான்.ஆனால் அவரது தம்பி அனில் அம்பானிக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சிறைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.விடுவார அண்ணன் முகேஷ் தம்பிக்கு ஏற்பட்ட கடனுகான தொகையை தருவதாக ஒப்புக்கொண்டார்.
 
இந்நிலையில் ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்ஸர், ரிலையன்ஸ் கேப்பிட்டல்ஸ், ரிலையன்ஸ் பவர் போன்ற அனில் அம்பானியின் நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன, இதனால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
இதுசம்பந்தமாக விளக்கம் அளித்துள்ள அனில் அம்பானி, கடந்த 14 மாதங்களில் அசல் மற்றும் வட்டி தொகை சேர்த்து 35, 400 கோடி ரூபாயை கடன் வழங்கிய நிறுவங்களுக்குக் கொடுத்திருப்பதாக கூறியுள்ளார்.
 
மேலும் , குறித்த காலத்திற்குள் கடனை செலுத்த சொத்துக்களை விற்று பணத்தைத் திரட்டவுள்ளதாகவும், சில வழக்குகளுக்கு இறுதி உத்தரவு வழக்காததால் தங்கள் நிறுவனத்திற்கு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிலுவைத் தொகை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலின அடையாளம் பற்றிய நவீன கருத்துகள் குடும்ப அமைப்பை சிதைக்கும்: வாடிகன் கருத்து