அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு உடன்பாடு இன்னும் கையெழுத்தாகவில்லை.. தேமுதிக முதலில் 41ல் ஆரம்பித்து பின்னர் 23 தொகுதிகளுக்கு கீழிறங்கி வந்துள்ளது. ஆனால் அதிமுக அந்த அளவுக்கு கொடுக்க முடியாது என்று சொல்லியுள்ளது. இதனால் பேச்சுவார்த்தை இழுபறியில் சென்று கொண்டிருக்கிறது. இன்று மாலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் அதிமுக 13 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என்று கறாராக சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் தேமுதிக அதிமுக கூட்டணியில் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.