Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்வீட் எடு.. கொண்டாடு..! இனிப்புகளில் கட்சி சின்னம்! – மேற்கு வங்கத்தில் நூதன பிரச்சாரம்!

Advertiesment
ஸ்வீட் எடு.. கொண்டாடு..! இனிப்புகளில் கட்சி சின்னம்! – மேற்கு வங்கத்தில் நூதன பிரச்சாரம்!
, திங்கள், 8 மார்ச் 2021 (11:42 IST)
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியுள்ள நிலையில் கட்சி சின்னங்கள் வடிவில் இனிப்புகள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 5 மாநிலங்களிலும் தேர்தல் பணிகள், பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசியல் கட்சிகள் பரிசு சின்னங்கள், பணம் உள்ளிட்டவை வழங்கும் நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் அவற்றை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் – பாஜக இடையே தேர்தல் பிரச்சாரம் வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் தங்களது கட்சியை மக்களிடையே விளம்பரப்படுத்த மேற்கு வங்க கட்சிகள் நூதன முறையை பின்பற்ற தொடங்கியுள்ளன. அடசியல் கட்சிகளின் சின்னங்களை இனிப்பு பதார்த்தங்களாக தயாரித்து மக்களிடையே விநியோகிக்கும் முயற்சிக்கு மேற்கு வங்கத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜபாளையம் தொகுதி யாருக்கு… பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே போட்டி!