Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10 % இட ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய நடவடிக்கை - துரைமுருகன்

Advertiesment
10 % இட ஒதுக்கீடு தீர்ப்பை  எதிர்த்து மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய நடவடிக்கை - துரைமுருகன்
, செவ்வாய், 8 நவம்பர் 2022 (18:55 IST)
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என்ற  இந்த 103 வது அரசியல் சட்டத் திருத்தத்தை உறுதி செய்யும் வழக்கின் தீர்ப்பு   நேற்று  காலை வெளியானது.

இந்த  தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வெளியிட்டிருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ள நிலையில்,  திமுக,. விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனை அடுத்து நிலையில் அதிக நீதிபதிகள் 10 சதவீத இட ஒதுக்கீடு பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு செல்லும் என தீர்ப்பளித்து உள்ளதை அடுத்து இந்த சட்டம் தொடர்ந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு  சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என பாஜகவினர் கூறி வரும்  நிலையில் எதிர்க்கட்சிகளான திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் ‘’சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து சமூகநீதிக்கு எதிரான முன்னேறி வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம்’ என  மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த  நிலையில், 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து திமுக சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சரும்  அக்கட்சியின் பொதுச்செயலாளரும்  துரைமுருகன் அறிவித்துள்ளார்.

அதில்,உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அரசியல் சட்டத்தின் அடிப்படையான சமத்துவக் கோட்பாட்டின் இதயத்தில் அடிப்பது போல் அமைந்திருக்கிறது.

முன்னேறிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கிடு அரசியல் சட்டத்ததின் அடிக்கட்டமைப்பை மீறுகிறது. எனவே நாட்டிலுள்ள 82% பட்டியலின , பழங்குடியின ,இததய பிற்படுத்தப்பட்ட இன மக்களிப்ன் சமூக நீதியைக் காப்பாற்றிய  மண்டல, கமிஷன் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு கொள்கையை நிலை நாட்டிய, திமுக சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.


நேற்று  காங்கிரஸ் கட்சி இத்தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் இன்று இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாமன் மகனுடன் திருமணம்.. ஓடும் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்த கல்லூரி மாணவி!