Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் அவலங்கள் - 2 குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ்காரர் மனைவி தற்கொலை

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2018 (09:11 IST)
2 குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ்காரர் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக குடும்ப பிரச்சனையின் காரணமாக, கடன் பிரச்சனையின் காரணமாக பெற்றோரே குழந்தைகளை கொல்லும் அவலங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 
தேனி மாவட்டம் கம்பம் புதுப்பள்ளிவாசல் அருகே உள்ள சமையன்தெருவை சேர்ந்த போலீஸ்காரரான அழகுதுரைக்கும் அவரது மனைவி ஜெயமணிக்கும் புதுவீடு கட்டுவது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்துள்ளது.
இதனால் மனவேதனையின் இருந்த ஜெயமணி தனது 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
பணிமுடிந்து வீட்டிற்கு திரும்பிய அழகுதுரை வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், அவர் கதவை தட்டினார். வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அழகுதுரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
 
அப்போது வீட்டில் மனைவி, குழந்தைகள் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார்  3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு அலுவலக நேரம் குறைப்பு.. முதல்வர் அறிவிப்பு..!

தமிழக பட்ஜெட் எப்போது? சபாநாயகர் அப்பாவு தகவல்..!

ஆட்டோக்களுக்கு அரசு செயலி அமைக்கப்படும்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

Go back Governor கோஷமிட்ட எம்.எல்.ஏ.க்கள்: உபி சட்டமன்றத்தில் பரபரப்பு..!

ஓபிஎஸ் ஒரு கொசு.. அவரை பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments