Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவியின் நிர்வாண புகைப்படம், காசு கேட்டு மிரட்டும் கணவர்

Advertiesment
மனைவியின் நிர்வாண புகைப்படம், காசு கேட்டு மிரட்டும் கணவர்
, வியாழன், 6 செப்டம்பர் 2018 (17:36 IST)
ஆந்திர மாநில கர்னூர் பகுதியில் திருமணமான புதிதில் தன்னை நிர்வாணமாக படம் பிடித்து, இப்போது அதை வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதாக கணவர் மீது புகார் கொடுத்துள்ளார் ஒரு பெண். 
 
கர்னூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரதாத்துக்கு அதே பகுதியை சேர்ந்த திரிவேணிக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்து முடிந்தது. திரிவேணி தற்போது தனது கணவர் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். 
 
அதில், என்னை பிரசாத்துக்கு திருமணம் செய்து வைத்த போது 45 லட்சம் ரொக்க பணம், 10 லட்சம் மதிப்புள்ள நகைகள், திருமண செலவிற்காக 10 லட்சம் என எனது வீட்டில் வரதட்சணை கொடுத்தனர். 
 
திருமணமான புதிதில் என் கணவர் என்னை நிர்வாணமாக சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். தற்போது இந்த புகைப்படங்களை வைத்துக்கொண்டு மேலும் பணம் வேண்டும் என மிரட்டி தினமும் கொடுமை செய்து வருகிறார். 
 
நான் இந்த கொடுமைகளை சகித்துக்கொண்டாலும், அவர் இவை அனைத்தையும் மீறி எனக்கு காசநோய் உள்ளது என கூறி அவமானப்படுத்தி வருகிறார். அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. அதற்காவே இவ்வாறு செய்து வருகிறார். 
 
எனக்கு அவருடன் வாழவும் விருப்பமில்லை. ஆகவே திருமணத்தின் போது எங்களது வீட்டில் இருந்து கொடுக்கப்பட்ட பணம், நகைகளையும் எனது படிப்பு சான்றிதழ்களையும் அவரிடம் வாங்கித்தரும் படி கேட்டுக்கொண்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது உறுதி: அமைச்சர் ஜெயக்குமார்