விவாகரத்தான நடிகை ஹோட்டல் அறையில் தற்கொலை!

வியாழன், 6 செப்டம்பர் 2018 (18:15 IST)
பெங்காளி நடிகை பாயல் சிலிகுரி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

 
பெங்காளி நடிகை பாயல் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சிலிகுரி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் தங்கியுள்ளார். 
 
அவர் தங்கியிருந்த அறை கதவை பலமுறை தட்டியும் திறக்கவில்லை. இதனால் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கதவை உடைத்து பார்த்தபோது பாயல் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.
 
இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு அண்மையில்தான் விவாகரத்தாகியுள்ளது. இவருக்கு ஒரு மகனும் உள்ளார். இந்த சம்பவம் பெங்காளி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் டார்கெட் செய்யும் ஹவுஸ்மேட்கள்! கதறும் மும்தாஜ்...